search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாழைகளை முறித்து"

    • 700-க்கும் மேற்பட்ட வாழைகளை முறித்து சாப்பிட்டதோடு, மிதித்து நாசம் செய்தது.
    • விவசாயிகள் செய்வதறியாது கவலையுடன் இருந்து வருகின்றனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளான ஓடந்துறை, நெல்லித்துறை, ஊமப்பாளையம், தாசம் பாளையம், குரும்பனூர் ,தோலம்பாளையம், வெள்ளியங்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாழை உள்ளிட்ட பயிர்கள் விவசாயம் பிரதானமாக செய்யப்பட்டு வருகிறது.

    சமீபகாலமாக உணவு மற்றும் தண்ணீரை தேடி ஊருக்குள் புகும் காட்டு யானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வதோடு மனிதர்களையும் அச்சுறுத்தி வருகிறது.

    குறிப்பாக கடந்த பல நாட்களாகவே தாசம் பாளையம், குரும்பனூர், தோலம்பாளையம், வெள்ளியங்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் தொடர்ந்து விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது.

    இதனால் விவசாயிகள் செய்வதறியாது கவலையுடன் இருந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு தோலம்பாளையம் மணல்காடு பகுதிகளில் மக்கள் வசிக்கும் பகுதியின் அருகிலேயே காட்டு யானைகள் முகாமிட்டு இருந்தது. இந்த யானைகள் கூட்டம் திடீரென ராமசாமி என்பவரது தோட்டத்திற்குள் சோலார் மின்வேலியினை உடைத்து உள்ளே புகுந்தது.

    அங்கு பயிரிடப்பட்டிருந்த சுமார் 700-க்கும் மேற்பட்ட வாழைகளை முறித்து சாப்பிட்டதோடு, மிதித்து நாசம் செய்தது. இதனை கண்டு ராமசாமியின் குடும்பத்தினர் கதறி அழுதனர். இது அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    ×